பிரமிக்க வைத்த ரியாத் தமிழ்ச் சங்க இரத்த தான முகாம்

பிரமிக்க வைத்த ரியாத் தமிழ்ச் சங்க இரத்த தான முகாம்

ரியாத் (20 மே 2024): ரியாத் தமிழ்ச் சங்கம் கடந்த 17/05/2024 வெள்ளிக்கிழமை அன்று நடத்திய நிகழ்ச்சி,  மன்னர் பஹத் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் “உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்! ” என்ற திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம் (குருதிக் கொடை நிகழ்ச்சி) ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தி பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. “இரத்ததானம் உயிர்களைக் காக்கும்; இரத்ததான விழிப்புணர்வை அதிகரிப்போம்; தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பான, தரமுள்ள இரத்தம் காலத்தே கிடைப்பதை உறுதி செய்வோம். நாம்…

மேலும்...
மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மழை வெள்ளத்தால் மூழ்கிய ஓமான் மற்றும் துபாய்!

மஸ்கட், ஓமான் (17 ஏப்ரல் 2024):  ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இல் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஓமானில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கியதால் இதுவரை 20 பேர் இறந்துள்ளனர். விமானங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் பருவ நிலை மாற்றம் காரணமாக அசாதாரண சூழல் நிலவுகிறது. சூறைக்காற்று, புயல், மழை என கடந்த இரு நாட்களாக வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஓமானில், நேற்று 16 ஏப்ரல்…

மேலும்...
பன்மடங்கு ஊதிய உயர்வு தரும் சவூதி - பணியாளர்கள் மகிழ்ச்சி!

சவூதியில் பன்மடங்கு உயர்கிறது ஊதியம் – பணியாளர்கள் மகிழ்ச்சி!

ரியாத் (21 பிப்ரவரி 2024): சவுதி அரேபியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பன்மடங்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என சவூதியில் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி எண்ணெயை நம்பியிருக்கும் நாடு ஆகும். சமீப காலமாக எண்ணெய் உற்பத்தியை மட்டுமே நம்பி இராமல் சுற்றுலா, தொழில்துறை மேம்பாடு, உள்நாட்டு தயாரிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனால் திறமையான தொழிலாளர்களுக்கான தேவை சவூதியில் அதிகரித்துள்ளது….

மேலும்...
ஹைடெக் ஸ்டேடியம்

அதிசய வைக்கும் சவூதியின் ஹைடெக் ஸ்டேடியம்!

ரியாத், சவூதி (16 ஜனவரி 2024): ரியாத் அருகே 200 மீட்டர் உயரமுள்ள குன்றின்மீது ஹைடெக் ஸ்டேடியம் அமைக்கிறது சவூதி அரசு. இந்த விளையாட்டு அரங்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வடிவமைப்பை சவுதி அரேபியா அரசு நேற்று திங்கள்கிழமை வெளியிட்டது. சவூதி அரேபியா நாட்டில் எதிர்வரும் 2034 ஆண்டு உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டு நடைபெற உள்ளது. இதனைக் காண வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு பிராஜக்ட்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஹைடெக்…

மேலும்...

பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!

தோஹா (05 டிசம்பர் 2023): வளைகுடா நாடுகளுக்கான Gulf Co-operation Council இன் 44வது அமர்வு இன்று தோஹாவில் நடைபெறுகிறது. இந்த அமர்வில், வளைகுடா நாடுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் அலசப்படுகின்றன. வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன. இந்த ஒப்பந்தங்களில் முக்கியமாகக் கருதப்படுவது, வளைகுடா-வின் ஆறு நாடுகளை ஒன்றிணைக்கும் அதிவேக ரயில்வே திட்டமாகும். இதற்கு கல்ஃப் ரயில்வே (Gulf Railway) எனப் பெயரிடப் பட்டுள்ளது. அதிவேக ரயில் திட்டம் –…

மேலும்...

வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பால் விலைகளைக் குறைக்கிறது மெக் டொனால்டு உணவகம்!

ரியாத், சவூதி (29 நவம்பர் 2023): மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மெக் டொனால்ட் உணவங்களில் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு குறைக்கப் படுகின்றன. வாடிக்கையாளர்கள் மெக் டொனால்ட் உணவை புறக்கணித்ததால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனின் காஸா பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் கடந்த 50 நாட்களாகத் தொடர்ந்து குண்டு வீசி இனப்படுகொலை செய்து வருகிறது. போர்க் குற்றமாக கருதப்படும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களைக் குறி வைத்து தாக்கி வருகிறது. இஸ்ரேலிய ஆதரவு (Support):…

மேலும்...

இஸ்ரேலிடம் பேசிப் பயனில்லை; இனி அதிரடி நடவடிக்கை! – கத்தார் மன்னர் அறிவிப்பு

ரியாத் – சவூதி அரேபியா (12 நவம்பர் 2023): ரியாத்தில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் கூட்டு அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சி மாநாடு (Joint Arab-Islamic Extraordinary Summit) நேற்று நடைபெற்றது. இந்த அவசர கால உச்சிமாநாட்டில் அனைத்து அரபு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கத்தார் நாட்டின் மன்னரான ஷேக் தமீம் பின் ஹாமத் அல்-தானி ஆற்றிய உரை, போர்க்காலச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கத்தாரின்…

மேலும்...

ஒரே விசாவில் இனி ஒட்டு மொத்த வளைகுடா பயணிக்கலாம்!

தோஹா, கத்தார் (09 நவம்பர் 2023):  வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இனி கத்தார், சவுதி அரேபியா, குவைத், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஒரே விசாவில் பயணிக்க முடியும். வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (Gulf Cooperation Council) உள்ள ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஓமனின் மஸ்கட்டில் நடைபெற்ற GCC உள்துறை அமைச்சர்களின் 40வது கூட்டத்தின்போது GCC-இன் பொதுச்செயலாளர் ஜாசிம்…

மேலும்...

சவுதி விசாவிற்கு இந்தியர்களுக்கு இனி போலீஸ் கிளியரன்ஸ் தேவையில்லை!

ரியாத் (17 நவ 2022): சவூதி அரேபியாவுக்கு புதிய வேலைவாய்ப்பு விசாக்களை முத்திரை குத்துவதற்கு டெல்லியில் உள்ள சவுதி தூதரகம் விதித்த போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் இனி அவசியமில்லை. முந்தைய இந்த உத்தரவை இந்தியாவில் உள்ள சவூதி தூதரகம் திரும்பப் பெற்றுள்ளது. சவுதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள சவுதி தூதரகம் ட்வீட் செய்துள்ளது. மேலும் சவூதி அரேபியாவில் மகிழ்ச்சியுடன் வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான…

மேலும்...

சவூதி சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவு!

தம்மாம் (15 ஜூலை 2021): சவூதி சிறையில் உள்ள 100 க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான தம்மம், கதிஃப் மற்றும் அல் கோபர் சிறைகளில் பல குற்ற வழக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 100 க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அடைப்படையில் இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பலரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை, எனவே சிறையில் உள்ளவர்களின் தங்கள் தகவல்களை சேகரித்து தூதரகத்தில் சமர்ப்பித்து…

மேலும்...