பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 15: ஆயிரம் ரூபாய் நோட்டு!

வெகு நாட்களுக்குப் பிறகு சேது சபைக்கு வந்திருந்தார். “இவ்வளவு நாள் ஆப்சென்ட் ஆன இவரை என்ன பண்ணலாம்?”  என்று ஆரம்பித்து வைத்தார் பிரகாசம். “பெஞ்சு மேல ஏத்திடுவோமா?” – அருள் “தோப்புக்கரணம்?” – நல்லையா “அபராதம் விதிச்சிடுவோம்” என்றார் ஜி. “இது என்னய்யா அநியாயமாக இருக்கிறது? இதுவரை விளக்கிய பாடங்களை எல்லாம் நீங்கள் நன்றாக உள்வாங்கிக் கொள்வதற்காகத்தான் இந்தச் சிறிய இடைவெளி. “ என்றார் சேது கண்சிமிட்டலுடன். “என்னது?  சிறிய இடைவெளியா?  இந்த சமாளிஃபிகேசனெல்லாம் வேண்டாம்.  முதல்ல…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 14 : பணம் காய்க்கும் மரம்

பேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி. இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது. எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மத்திய வங்கி (Central Bank) இருக்கும். அதன் பணிகளுள் முக்கியமானது அந்த நாட்டிற்கான கரன்சி நோட்டுகளை அச்சடித்து வெளியிடுவதாகும். இது நமக்கெல்லாம் தெரிந்ததுதான். இந்தப் பணியை இன்றளவும் மற்ற எல்லா மத்திய…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து!

டேல்லி குச்சிக்கும் இங்கிலாந்து – ஃபிரான்ஸ் போருக்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருக்கிறது. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஃபிரான்ஸிற்கும் ஆங்கிலோ-டச்சு, ரோம், ஸ்பெயின் உள்ளிட்ட இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றது. கி.பி 1688 முதல் 1697 வரை நடந்த இந்த யுத்தத்தை ‘ஒன்பது ஆண்டு யுத்தம்’ (Nine Years’ War) என்றே வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த யுத்தத்தின் ஒரு அங்கமாக 1690, ஜூலை 10 அன்று ‘பீச்சி ஹெட்’ என்ற இடத்திற்கு…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 12: டேல்லி குச்சிகள்!

இந்தக் கதையில் பண்ட மாற்றிலிருந்து பண நோட்டிற்கு வெகு சீக்கிரம் வந்து விட்டோம். ஆனால் உண்மையில், இந்த மாற்றத்திற்கு வெகுகாலம் பிடித்தது. பல நூற்றாண்டுகள்! தங்கம், வெள்ளி போன்ற மதிப்பு மிக்க உலோகங்களால் செய்யப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் வருவதற்கு முன்பு ஒவ்வொரு பிரதேசத்திலும் வசித்த மக்கள் வெவ்வேறு விதமான பொருட்களை ‘நாணயங்களாக’ பயன்படுத்தியிருக்கிறார்கள். பண்டைய சீனா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற பிரதேசங்களில் ஒருவகை சிப்பிகள் நாணயங்களாக பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ஜப்பானில் ‘கோகு’ எனப்படும் அரிசி, யூதர்களிடையே…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 11: கள்ளச் சீட்டும் ‘நல்ல’ சீட்டும்!

நிர்வாகச் சபைத் தலைவர்களின் கூட்டத்தில் ‘கள்ளச் சீட்டுகளைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது’ என்று சொன்ன அய்யாவு, “துண்டுச் சீட்டுகளை பொற்கொல்லர்களாகிய நாங்கள் எழுதிக் கொடுப்பதற்குப் பதிலாக நிர்வாகச் சபையே அவற்றை அச்சிட்டு வெளியிடுவதுதான் ஒரே வழி” என்றார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்?” என்று கேட்டார் ஒரு தலைவர். “நாம் முதல் முதலாக தங்க நாணயங்களை வெளியிட்டோமே, நினைவிருக்கிறதா? வெளியார் யாரும் தங்கத்தை உருக்கி அவர்களே நாணயங்களை செய்து கொள்ளக் கூடாது என்பதற்காக நிர்வாக சபையின் ஒப்புதலுடன்…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 10: ரகசிய வித்தை

தன்னை நாடி வந்த பிற ஊர் பொற்கொல்லர்களை அய்யாவு கனிவாக வரவேற்றார். அவர்கள் வருவார்கள் என்பதை அவர் எதிர்பார்த்தார் என்றுகூடச் சொல்லலாம். உள்ளூரில் அமோகமாக நடந்துக் கொண்டிருந்த தம் தொழிலை வெளியூர்களிலும் கிளை பரப்ப அவர் தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தார். அந்தந்த ஊர்களில் உள்ள பொற்கொல்லர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அய்யாவுவால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. அவர்களிடம் தானே வலியச் செல்வதைவிட அவர்களே தம்மை நாடி வந்தால் நன்றாக இருக்கும் என்பதும் அய்யாவுவின் எதிர்பார்ப்பு. பழம் கனிந்து பாலில்…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 9: திட்டத்தின் அடுத்த கட்டம்!

அய்யாவு கையெழுத்திட்ட துண்டுச் சீட்டுகளையே தங்களின் வியாபாரப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி வந்த மக்கள், அதற்குண்டான தங்க நாணயங்கள் அய்யாவுவிடம் இருக்கின்றன என்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டார்கள்.  ஆனால் அய்யாவு மறக்கவில்லை.  ‘எனது இரும்புப் பெட்டகத்தில் ஆயிரக்கணக்கான தங்க நாணயங்கள் வெறுமனே தூங்கிக் கொண்டிருக்கின்றன.  இவ்வளவு செல்வத்தையும் முறையாக பயன்படுத்தாவிட்டால் என்னை விட அடி முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.  இந்த நாணயங்களெல்லாம் என்னுடையவை அல்ல என்பதென்னவோ உண்மைதான்.  ஆனால் அவை என்னுடைய கட்டுப்பாட்டில்தானே இருக்கின்றன? என்னிடம்…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை – பகுதி 8: Back to அய்யாவு’s story!

“எங்கே விட்டேன் அய்யாவு கதையை?” என்று கேட்டார் சேது. “சமூகத்துல பெரும் செல்வாக்கு உள்ளவனா ஆகணும் என்பதற்காக ஊர் மக்களையெல்லாம் கடனாளிகளாக்க திட்டம் போட்டான் என்று சொன்னீங்க” “கரெக்ட்.. அய்யாவு திட்டம் போட்டபடியே எல்லாம் நடந்தது. ஊர் மக்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து அவனுடைய கடனை ஒட்டு மொத்தமாக அடைக்க விரும்பினாலும் அது நடக்காது என்பதை யாருமே உணரவில்லை. ‘பணம்’ என்ற ஒரு புதிய ‘வஸ்து’வின் மூலம் அவர்கள் அனைவரையும் அவன் தூண்டிலில் சிக்கிய மீன்…

மேலும்...

பணம் வந்த கதை பகுதி – 6: ஈக்வடோருக்கு வந்த சோதனை!

அய்யாவுவின் கதையைச் சொல்லிக் கொண்டே வந்த சேது, ‘அய்யாவுவிடம் கடன் பெற்றிருந்தவர்கள் அவனுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகப்படியான 400 நாணயங்கள் எங்கிருந்து வரும்?’ என்ற கேள்வியுடன் நிறுத்தினார். சபையில் சிறிது நேரம் மௌனம். “என்னங்க.. இப்படி ஒரு சஸ்பென்ஸ்ல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே?” என்றார் அதியமான். “அதானே.. மீதி 400 நாணயங்கள் எங்கிருந்து வரும்?” என்றார் பிரகாசம். “பையில இருந்தாத்தானே கையில வரும்? அந்த ஊர் முழுக்க புழக்கத்தில் இருக்கும் மொத்த நாணயங்களே 10100 தான்…

மேலும்...
பணம் வந்த கதை – தொடர்!

பணம் வந்த கதை பகுதி – 5: நானூறு நாணயங்கள் எங்கே?

ஓராண்டு உருண்டோடிப் போனது. ‘பண’ப் பரிவர்த்தனைக்கு மக்கள் வெகுவாக பழகி விட்டார்கள். அய்யாவுக்கு தன்னுடைய விளைச்சலை அறுவடை செய்யும் ஆசை வந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் பேரேட்டுப் புத்தகத்தை எடுத்து கட்கத்தில் இடுக்கிக் கொண்டு புறப்பட்டான். அவனிடம் கடனாக நாணயங்களைப் பெற்றுச் சென்றவர்கள் ஆண்டு முடிவில் 100 நாணயங்களுக்கு 5 அதிகப்படியான நாணயங்களை சேர்த்துத் திருப்பித்தர வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம்? முதலில் பலகார வியாபாரி. பணப்புழக்கம் ஏற்பட்ட பிறகு அவனது அன்றாட நடைமுறை வெகுவாக மாறி…

மேலும்...