முலாயம் சிங் யாதவ் காலமானார்!

குருகிராம் (10 அக் 2022): உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. டெல்லி அருகே குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். சிறுநீரக பிரச்சனைகள் தவிர, உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றால் முலாயமின் உடல்நிலை மோசமடைந்தது. உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், ஐசியூவில் இருந்து சிசியூவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் முலாயம் சிங்…

மேலும்...

எம்.எல்.சி தேர்தலில் டாக்டர் கஃபீல்கான் போட்டி!

லக்னோ (16 மார்ச் 2022): வரவிருக்கும் உத்தரப்பிரதேச எம்எல்சி தேர்தலில் தியோரியா-குஷிநகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி டாக்டர் கஃபீல்கானை வேட்பாளராக நிறுத்துகிறது. இதனை சமாஜவாதி கட்சியின் தேசியச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ராஜேந்திர சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த கஃபீல் கான், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை ட்வீட் செய்து இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். 2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி!

லக்னோ (11 மார்ச் 2022): 2017 இல் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2022 தேர்தலில் 36 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற சில முக்கிய முஸ்லிம் எம்.எல்.ஏக்களில் அசம் கான், அவரது மகன் அப்துல்லா ஆசம் கான் ஆகியோர் அடங்குவர். 19% முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற உறுப்பினர்களில் 8.93% சிறுபான்மை சமூகத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஆவர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி…

மேலும்...
Mamta-Banerjee

உத்திர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதியுடன் கரம் கோர்க்கும் மம்தா!

லக்னோ (19 ஜன 2022): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சமஜ்வாதிக்கு ஆதரவாக ஈடுபடவுள்ளார். அகிலேஷ் யாவுடன் கரம் கோர்க்கும் மம்தா பானர்ஜி, லக்னோவில் அகிலேஷ் யாதவின் தேர்தல் பேரணியில் கலந்து கொள்கிறார். தனது கட்சி பிரச்சாரத்திற்கு மம்தாவை எஸ்பி துணைத் தலைவர் கிரண்மோய் நந்தா நேரில் அழைத்திருந்தார். பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் பேரணியின்போது மம்தா பானர்ஜி ஆன்லைனில் பேசுவார். அதேபோல, வாரணாசியில் நடைபெறும் பேரணியில் அகிலேஷுடன் மம்தாவும்…

மேலும்...

உ.பி பாஜகவுக்கு நெருக்கடி – சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர் பாஜகவில் இருந்து விலகிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்!

லக்னோ (14 ஜன 2022): உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் (எஸ்பி) இணைந்தனர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் லக்னோவில் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டனர். இவர்களுடன் ராஜினாமா செய்த பாஜக எம்எல்ஏக்கள் பகவதி சாகர், வினய் ஷக்யா, முகேஷ் வர்மா, ரோஷன்லால் வர்மா…

மேலும்...

பாஜக எம்.எல்.ஏ கன்னத்தில் விவசாய சங்கத் தலைவர் விட்ட பளார் – வீடியோ!

உன்னாவ் (07 ஜன 2022): உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜக எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா கன்னத்தில் விவசாய சங்கத் தலைவர் ஒருவர் பொது இடத்தில் சரமாரியாக அறைந்தார். இந்த திடீர் ஆத்திரமூட்டலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எம்.எல்.ஏ.வை கன்னத்தில் அறைந்தவரின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. எம்.எல்.ஏ. தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. उन्नाव सदर से भाजपा विधायक पंकज गुप्ता को आयोजित जनसभा में किसान नेता ने…

மேலும்...

கோவிலுக்கு வாட்டர் கூலர் அன்பளிப்பு வழங்கிய முஸ்லீம் – அடித்து நொறுக்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்!

அலிகார் (01 ஜூலை 2021): கோயிலுக்கு முஸ்லீம் ஒருவர் நன்கொடை அளித்த வாட்டர் கூலரில் உள்ள முஸ்லீம் பெயர் அடங்கிய தகடுகளை அடித்து நொறுக்கியவர்கள் மீது, கோயில் குழு அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். உத்திரப் பிரதேசம் அலிகரில் உள்ள ஒரு கோவிலுக்கு அப்பகுதி சமாஜ்வாடி கட்சித் தலைவர் சல்மான் ஷாஹித் வாட்டர் கூலரை அன்பளிப்பாக வழங்கினார். அதில் சல்மான் ராஷித் பெயர் பொறிக்கப் பட்டிருந்தது. சமீபத்தில் கோவிலுக்குள் நுழைந்த பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர், ஒரு முஸ்லீம்…

மேலும்...