சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த அதிர்ச்சி!

தூத்துக்குடி (27 ஜூன் 2020): தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித்தொழிலாளி கணேச மூர்த்தி நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை. போலீசார் அவரை தாக்கியதே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. உரிய விசரணை நடத்தக் கோரி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போலீசார் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர்விஜயா ஆகியோர் குடும்பத்தினருடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

மேலும்...