தோல்வியை கொண்டாடி ஆச்சர்யப்படுத்திய திமுக பிரமுகர்!

பரங்கிப்பேட்டை (04 பிப் 2020): தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தோல்வியை பிரியாணி விருந்து வைத்து கொண்டாடியுள்ளார் திமுக பிரமுகர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துபெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளரான இவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இதே பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் திருமாறன் வெற்றிபெற்றார். 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்…

மேலும்...

தமிழகம் முழுவதும் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்!

சென்னை (15 ஜன 2020): தமிழர் திருநாளாம் தை முதல் நாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்பாடு, கலாச்சாரம் மற்றும் விவசாயத்தை போற்றும் வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் புது வண்ணம் பூசியும், அலங்காரத் தோரணங்களைக் கட்டியும், வண்ணக் கோலமிட்டும் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் உறவினர்கள், நண்பர்கள் சூழ இணைந்து கொண்டாடுகின்றனர்.

மேலும்...