நோன்பு திறக்க சென்றவர்கள் மீது ரெயிலில் தீ வைத்து படுகொலை – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கோழிக்கோடு (03 ஏப் 2023): கேரளா மாநிலத்தில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்ததில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்துக்கொண்டிருந்தது. சரியாக இரவு 9.45 மணியளவில் ரயில் கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்து கோராபுழா ரயில்வே பாலத்தில் சென்றக்கொண்டிருக்கையில், மர்ம நபர் ஒருவர் ரெயிலுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்….

மேலும்...

தேசிய சைக்கிள் சப்-ஜூனியர் போட்டியில் பங்கேற்க நாக்பூர் சென்ற வீராங்கனை நிடா பாத்திமா திடீர் மரணம்!

நாக்பூர் (24 டிச 2022): தேசிய போலோ சைக்கிள் சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்த கேரள அணி வீராங்கனை பத்து வயது நிடா பாத்திமா திடீரென உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிடா பாத்திமா அருந்திய உணவு விஷமாக மாறியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் நிடா பாத்திமாவின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதம் எழுதியுள்ளார்….

மேலும்...

ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் நிறுத்தம்!

கொச்சி (13 டிச 2022): ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட பிறகு விமானம் திடீரென நிறுத்தப்பட்டது. கொச்சி-கோழிக்கோடு-பஹ்ரைன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்இரண்டரை மணி நேரம் தாமதமானது. தொழில்நுட்பக் கோளாறுதான் என்பது அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். விமானத்தில் ஏசி சரியாக இயங்காததால் பயணிகளும் சிரமப்பட்டனர். விமானத்தின் கதவு மூடப்பட்டபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த பிடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட பிறகு எந்த அறிவிப்பும் கூட கொடுக்காமல் நிறுத்தப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

தனி ஒருத்தியாக கேரளா-கத்தார் ஜீப் பயணத்தில் அசத்திய நாஜிரா!

கத்தார் (07-12-2022): கால்பந்து விளையாட்டின் மீதும் பயணங்களின் மீதும் அளவுகடந்த காதல். இதை வைத்து தனியொரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? கேரளா-வின் கண்ணூர் நகரத்தில் இருந்து தோஹா-கத்தாருக்கு மஹிந்த்ரா ஜீப்பில் தனியாளாக பயணித்து கத்தார் வந்திருக்கிறார். இவர் நாஜிரா நவ்ஷாத் என்ற இளம்பெண். திருமணமாகி கணவர் குழந்தைகளோடு வசித்தாலும், தனிமைப் பயணத்தில் மிகவும் நாட்டமுடையவர். சிறுவயது முதல் அர்ஜென்டினாவின் தீவிர ரசிகையான இவர், கத்தாரில் நடைபெறும் FIFA World Cup 2022 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில்…

மேலும்...

காதலனுக்கு விஷம் கொடுத்தது எப்படி? நடித்துக் காட்டிய காதலி கிரிஷ்மா!

திருவனந்தபுரம் (07 நவ 2022): கன்னியாகுமரியில் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான பாறசாலையில், ஷாரோன் என்ற இளைஞருக்கு அவரது காதலியே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியான கிரீஷ்மாவை கேரள குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் போது குளிர்பானத்திலும் கஷாயத்திலும் விஷம் கலந்து கொடுத்து ஷாரோனை கொலை செய்ததாக கிரீஷ்மா போலீசாரின் விசாரணையில் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் கேரள குற்றப்பிரிவு போலீசார்…

மேலும்...

ஒருதலை காதல் – இளம்பெண் கழுத்தறுத்து கொலை!

கண்ணனுர் (23 அக் 2022): கேரளாவில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கேரளா மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கூத்து பறம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (23). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஷ்ணுபிரியாவின் பாட்டி மரணமடைந்ததை அடுத்து விஷ்ணுபிரியாவின் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் அக்டோபர் 22 ஆம் தேதி இறுதிச் சடங்கிற்காக சென்றுவிட்டனர். அப்போது விஷ்ணு பிரியா வீட்டில் தனியாகவே…

மேலும்...

என்ஐஏ வால் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி முஹம்மது அமீன் சிறையில் மரணம்!

புதுடெல்லி (09 அக் 2022): என்ஐஏ வால் கைதாகி சிறையில் இருந்த கேரள இளைஞர் முஹம்மது அமீன் டெல்லியில் உயிரிழந்தார். கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த முஹம்மது அமீன், பெங்களூரில் மாணவராக இருந்தார்., ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மார்ச் 2021 இல் என்ஐஏ முஹம்மது அமீனை கைது செய்தது. முஹம்மது அமீன் மீது நீதிமன்றத்தில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது. அமீனுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் தாக்குதல் நடத்த…

மேலும்...

பாப்புலர் ஃப்ரெண்ட் நிர்வாகி படுகொலை – ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டு!

கோழிக்கோடு (15 ஏப் 2022): கேரளாவில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா தலைவர் சுபைர் கொடூராமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் என பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சிபி முகமது பஷீர் கூறுகையில். எலப்புள்ளி பாரா வட்டாரத் தலைவர் சுபைர், வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து தந்தையுடன் பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது கார் மோதி கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்….

மேலும்...

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் கல்விக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

திருவனந்தபுரம் (14 மார்ச் 2022): கேரளாவின் உக்ரைன் மருத்துவ மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடரும் வகையில் அவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களின் கல்விக்காக பட்ஜெட்டில் 10 கோடியை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். மேலும், அதற்கான நிதியையும் அவர் ஒதுக்கியிருக்கிறார். மார்ச்11 அன்று நடந்த கேரள அரசின் பட்ஜெட் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. உக்ரைனிலுள்ள பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளில் கேரளாவின் 2,800 மாணவர்கள் பயின்றுவந்தனர். தற்போது போர் நடைபெற்றுவரும் உக்ரைன் நாட்டிலிருந்து தமிழக மாணவர்கள்…

மேலும்...

மாணவர் காவல்துறை சீருடைகளில் ஹிஜாப் அணிய கேரள அரசு மறுப்பு!

திருவனந்தபுரம் (28 ஜன 2022): மாணவர் காவல்துறை சீருடைகளில் ஹிஜாப் அணிய கேரள அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஹிஜாப் அனுமதி கோரி எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவரின் மனு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள அரசு, சீருடையில் மதச் சின்னங்களைச் சேர்ப்பது பொருத்தமற்றது என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசு உள்ளது. இது தவறான செய்தியைக் கொடுக்கும் மற்றும் மதச்சார்பற்ற தன்மை கொண்ட பிற பிரிவுகளில் இருந்து இதே போன்ற கோரிக்கைகள் எழும் எனவே…

மேலும்...