குஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்!

அஹமதாபாத் (29 அக் 2020): குஜராத் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கேசுபாய் படேல் கொரோனா பாதிப்பால் காலமானார். 92 வயதற்கான கேசுபாய் படேல், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட படேல் வியாழக்கிழமை காலை இறந்தார். டைம்ஸ் ஆப் இந்தியா படி, படேலுக்கு செப்டம்பர் மாதம் கோவிட் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லை. படேல் இரண்டு முறை குஜராத்தின் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...