பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார் கு.க.செல்வம்!

சென்னை (12 பிப் 2022): திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் கு.க. செல்வம். கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவராகவும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில், திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தார். சுமார் இரண்டு…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதா கிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை!

சென்னை (09 ஆக 2020): திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணையப்போவதாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கு.க.செல்வத்தைத் தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து மேலும் பலர் பா.ஜ.க. தலைவர்களைச் சந்திக்க உள்ளனர் என்றும், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பெயர்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு மறுப்பு தெரிவித்து .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் , “கடந்த சில…

மேலும்...

அண்ணாவே சொல்லிவிட்டார் – ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் திமுக எம்.எல்.ஏ!

சென்னை (08 ஆக 2020): திமுகவை சேர்ந்தவர்கள் மற்ற கட்சிக்காரங்களை சந்திக்கக் கூடாது என்றா எந்த விதியும் இல்லை என்று என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; “பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்தது தொடர்பான விவகாரத்தில் பதிலளிக்கும் முன்னரே கட்சியில் இருந்து நீக்கியிருப்பது இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ள…

மேலும்...

திமுக எம்.எல்.ஏவுக்கு திமுக தலைமை நோட்டீஸ்!

சென்னை (05 ஆக 2020): பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்திற்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ, கு.க.செல்வம், நேற்று டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கு.க.செல்வம், “ராமர் கோயிலுக்குப் பூமி பூஜை நடத்தும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம்…

மேலும்...