வெட்கக்கேடானது – குஷ்பு அதிரடி கருத்து!

கோவை (08ன் ஜன 2023): தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. பாஜக தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து பாடல் பாடி கும்மி அடித்து…

மேலும்...

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்!

சென்னை (14 மே 2021): நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் புனித பண்கையான ரம்ஜான் வெறள்ளியன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. ரம்ஜானை ஒட்டி பல பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை குஷ்புவும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்...

குஷ்புவை கழட்டி விட பாஜகவின் பலே திட்டம்!

சென்னை (17 டிச 2020): 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக பாஜகவின் சார்பில் குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்கிற கணிப்புகள் உள்ள நிலையில், அதிமுகவுடன் தான் கூட்டணி என்பது பாஜகவில் உறுதியாகிவிட்டது. தமிழக பாஜகவும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது….

மேலும்...

நடிகை குஷ்பூ கைது!

சிதம்பரம் (27 அக் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில்,  தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் கைது செய்தனர். முட்டுக்காடு அருகே சுந்தரவதனம் எஸ்.பி தலைமையிலான போலீஸ், குஷ்புவை கைது செய்தது.

மேலும்...

பாஜகவினரை எதிர்ப்பேன் – குஷ்பு அதிரடி!

சென்னை (16 அக் 2020): பெரியாரை விமர்சிக்கும் பாஜகவினரை கட்டயமாக கண்டிப்பேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு, அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்த பின்னர் சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெரியாரை இன்றும் மதிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பெரியாரை பாஜகவினர் யாரும் விமர்சித்தால் அதனை கண்டிக்கும்…

மேலும்...

அரசின் உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது – நடிகை குஷ்பு திட்டவட்டம்!

சென்னை (26 மே 2020): சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அரசு பிறப்பித்துள்ள உத்தரவுபடியெல்லாம் நடக்க முடியாது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஒரு படப்பிடிப்பில் 20 பேர் கலந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஆனால் 20 பேரைக் கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது 60 பேரை அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோல சின்னத்திரை…

மேலும்...

எங்களுக்கு இப்போதைக்கு அனுமதி கொடுங்க – நடிகைகள் கோரிக்கை!

சென்னை (04 மே 2020): சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கக்கோரி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகையுமான குஷ்பு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசிய பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்த நடிகை…

மேலும்...

ரஜினிக்கு ஆதரவாக குஷ்பு கருத்து!

சென்னை (22 ஜன 2020): நடிகர் ரஜினியின் நிலைப்பாட்டிற்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர். ஆனால் ரஜினி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். ரஜினியின் நிலைப்பாட்டிற்கு அதிகமான…

மேலும்...