குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் கைது!

சென்னை (27 ஜன 2020): சென்னை மயிலாப்பூரில் ‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். மயிலாப்பூா் தியாகராஜபுரத்தில் வசிக்கும் ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வீட்டின் அருகே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 இருசக்கர வாகனங்களில் 6 போ் வந்தனா். அதில் ஒரு நபா், தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசுவதற்கு எடுத்துள்ளாா். அப்போது அங்குள்ள நாய் பலமாகக் குரைத்ததால், பாதுகாப்பு பணியில் இருந்த…

மேலும்...

விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் விவகாரம் – மீண்டும் பிரசுரமாகும் 1971துக்ளக் கட்டுரை!

சென்னை (22 ஜன 2020): துக்ளக் விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்த 1971 துக்ளக் கட்டுரையை மீண்டும் வெளியிடப் போவதாக அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு…

மேலும்...