
தன்னார்வலர்கள் உதவுவதற்கு தடையில்லை – சென்னை காவல் ஆணையர் தகவல்!
சென்னை (13 ஏப் 2020): தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு உதவி செய்ய தடை விதிக்கப்படவில்லை ஆனால் வழிமுறையில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் நேரடியாக மக்களைச் சந்தித்து நிவாரண உதவி வழங்கக்கூடாது, அதை அரசிடம் அளிக்கவேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு பலமுனையிலிருந்தும் எதிர்ப்பு வரவே, இதுகுறித்து சென்னை காவல் ஆணையர்…