காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய ஹர்திக் படேல் பின்னடைவு!

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் அனைவரும் முன்னேறி வரும் நிலையில், பாஜகவின் அல்பேஷ் தாக்கூர், ஹர்திக் படேல் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.ப்ஜிக்னேஷ் மேவானி முன்னிலையில் உள்ளார். குஜராத் முதல்வர் வேட்பாளர் பூபேந்திர படேல் முன்னிலை வகிக்கிறார். வட்காமில் ஜிக்னேஷ் மேவானியும், கம்பலியாவில் ஆப்ஸின் இசுடன் காட்வியும் முன்னேறி வருகின்றனர். காந்தி நகர் தெற்கில் அல்பேஷ் தாக்கூர் பின்தங்கியுள்ளார். விரங்கத்திலும் ஹர்திக் படேல் பின்தங்கியுள்ளார். ஜாம்நகரில் பாஜகவின் ரிவாபா ஜடேஜாவும் முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸில் இருந்து…

மேலும்...

குஜராத்தில் பாஜக முன்னிலை!

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. குஜராத்தில் பாஜக 100ஐ தாண்டியுள்ளது. பாஜக தற்போது 128 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியால் மாநிலத்தில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

மேலும்...

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை!

புதுடெல்லி (08 டிச 2022): இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மேலும்...

ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பின்னடைவு!

சிம்லா (08 நவ 2022): சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தின் 26 முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்கள் ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் மாநில பொறுப்பாளர் சுதன் சிங் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் தரம்பால் தாக்கூர், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சைனி, முன்னாள் கவுன்சிலர் ராஜன் தாக்கூர், இளைஞர்…

மேலும்...
Rahul and Modi

குஜராத் சட்டபேரவை தேர்தல் – இன்று அறிவிப்பு!

ஆமதாபாத் (03 நவ 2022): குஜராத் சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிக்கின்றனர். 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

நான் காங்கிரஸ் தலைவரானால் இதெல்லாம் நடக்கும் – சசிதரூர் உறுதி!

கவுஹாத்தி (16 அக் 2022): காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாஜகவில் இணையும் காங்கிரஸ் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசிதரூர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வாக்கு சேகரித்து கவுஹாத்தி சென்ற சசிதரூர் கூறுகையில், காந்தி குடும்பம் எப்பொழுதும் காங்கிரஸுடன் இருக்கிறது, நாங்களும் அப்படித்தான். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸின் வெற்றி என்ற…

மேலும்...

புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்!

ஜம்மு (26 செப் 2022): ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை துவக்கினார். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், சமீபத்தில் காங்கிரசில் இருந்து வெளியேறினார்; தனிக் கட்சி துவக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். அதன்படி, தனது புதிய கட்சி குறித்தான அறிவிப்பை குலாம் நபி ஆசாத் இன்று வெளியிட்டார். தனது கட்சிக்கு ‘ஜனநாயக ஆசாத் கட்சி’ எனப் பெயரிட்டுள்ள…

மேலும்...

காங்கிரஸுக்கு காந்தி குடும்பம் இல்லாதவர் தலைவராகிறார்!

புதுடெல்லி (20 செப் 2022): 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வருவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கலோட் மற்றும் கேரள மாநிலம் எம்பி சசி தரூர் ஆகியோர் களத்தில் உள்ளனர். அசோக் கலோட் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலைவர். கட்சியில் சீர்திருத்தம் கோரிய கோஷ்டியின் தலைவராக சசி தரூர் உள்ளார். காங்கிரஸின் ஜி23 குழுவின்…

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (15 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையை அடுத்து இன்னொரு யாத்திரையை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் புதிய யாத்திரை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கில் குஜராத்தில் இருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்யும் புதிய யாத்திரையை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், பாரத்…

மேலும்...
Sonia Gandhi

மீண்டும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியின் பெயர் பரிந்துரை!

புதுடெல்லி (14 செப் 2022): காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தியின் பெயரை பரிந்துரைக்க அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டி, சோனியா காந்தியை தலைவர் பதவிக்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறுகிறது….

மேலும்...