பாஜக தலைவர்கள் கனடா நாட்டிற்குள் நுழைய தடை?

டொரோண்டோ (02 செப் 2022): பாரதிய ஜனதா கட்சியின் (BJP) பல முக்கிய தலைவர்களின் இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளை கண்டித்து அவர்கள் கனடாவில் காலடி வைப்பதை தடை செய்ய வேண்டும் என்று கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) கனடா அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில் (NCCM) வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் போன்ற பிற சிறுபான்மைக் குழுக்களுக்கு எதிராக இந்தியாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன….

மேலும்...

கேவலப்பட்ட குஜராத் மாடல் – விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவு!

அகமதாபாத் (03 ஜூலை 2022): குஐராத்தில் தேர்தல் முறைகேடு மூலம் அமெரிக்கா சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவர்களால் ஆங்கிலத்தில் உரையாட முடியாமல் நின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆங்கில திறனறிவு தேர்வான ஐஇஎல்டிஎஸ் தேர்வில், முறைகேடாக மதிப்பெண் பெற்றிருந்தது…

மேலும்...

கனடாவில் போராட்டம் தீவிரம் – ரகசிய இடத்தில் பிரதமர்!

டொராண்டோ (30 ஜன 2022): கனடா அரசின் கட்டாய தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட கோவிட் விதிகளுக்கு எதிராக தலைநகரில் நடைபெறும் போராட்டம் திவரமடைந்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. அதில் தடுப்பூசி கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கோவிட் விதிமுறைகளை நீக்க வலியுறுத்தி பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் திரண்டனர். சிறுவர்கள், பெரியவர்கள்,…

மேலும்...

50 டிகிரி கடும் வெப்பம் – 486 பேர் பலி!

டொரோண்டோ (01 ஜூலை 2021): கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு நிலவும் வெப்பத்தின் காரணமாக, பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 486 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவுக்கு பெயர் போனது கனடா நாடு. அங்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பள்ளிகள், தடுப்பூசி மையங்களை மூட…

மேலும்...

அமெரிக்க சம்பவத்துக்கு எதிராக போராட்டத்தில் மண்டியிட்ட கனடா பிரதமர்!

டொரன்டோ (07 ஜூன் 2020): ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்டு போலீஸ் அத்துமீறலால் சமீபத்தில் அமெரிக்காவில் உயிரிழந்தார். இதையடுத்து இன வெறி போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கனடா தலைநகரான ஒட்டாவாவில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது போராட்டக்காரர்கள் அவரை மண்டியிடக் கூறினர். இதையடுத்து அவர் மண்டியிட்டு கோஷம் எழுப்பி போராட்டத்துக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.

மேலும்...

இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவு – கனடாவிலும் இந்துத்வா ஆதரவாளர் மீது நடவடிக்கை!

டொரொண்டோ (06 மே 2020): சமூக வலைதளத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுக்காக கனடாவில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்வாவினர் நடத்தும் அத்துமீறல்கள், அடக்குமுறைகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அரபு நாடுகளில் உள்ள அரபியர்கள், அதிகாரிகள் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனடாவில் ரவி என்பவர் இஸ்லாமிற்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிந்த பதிவிற்காக அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா…

மேலும்...

கனடாவில் பயங்கரம் – மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி!

டொராண்டோ (20 ஏப் 2020): கனடாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கன்டாவின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். போலீசார் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பெண் போலீசார் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண்…

மேலும்...

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் – தனி அறையில் பிரதமர்!

டொரன்டோ (13 மார்ச் 2020): கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவருடைய மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்புக்காப்பாக பிரதமர் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பினார். அதையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரை கொரோனா தொற்றியுள்ளது தெரிய வந்தது. எனவே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருடைய மனைவியும் அடுத்த 14 நாள்களுக்கு தடுப்புக்காப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கனடாவில் 145…

மேலும்...

கனடாவில் தமிழக மாணவிக்கு கத்தி குத்து!

டொராண்டோ (25 ஜன2020): கனடாவில் படித்து வரும் குன்னூரைச் சோ்ந்த மாணவியை, ஒருவர் கத்தியால் குத்திய கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குன்னூா், புரூக்லேண்ட்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஆல்பா்ட், தொழிலதிபா். இவரது இரண்டாவது மகள் ஆஞ்சலின் ரேச்சல் (23) கனடா நாட்டில் உள்ள டொரண்டோ யாா்க் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வருகிறாா். இவரை அங்குள்ள ஒருவா் ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்துள்ளாா். ஆனால், ஆஞ்சலின் அவரது காதலை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நபா்…

மேலும்...