தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய பஜக நிர்வாகி!

ஈரோடு (24 ஜன 2023): ஈரோடு அருகே தன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக நிர்வாகி சண்முகம் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணபதிபாளையம் மாணுவக்காடு போயர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (43). இவர் விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு அய்யம்மாள் (39) என்ற மனைவியும், விக்னேஷ் (15), அடல் பிகாரி வாஜ்பாய் (13), ராஜேஸ் (10) என்ற மகன்களும் உள்ளனர். சண்முகம் தேவேந்திர குல வேளாளர் மோடி பாசறையின்…

மேலும்...

ஈரோடு இடைத்தேர்தல் – காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான்!

புதுடெல்லி (22 ஜன 2023): ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு…

மேலும்...

ஈரோட்டில் நடைபெறும் ஜமாத்துல் உலமாவின் தேச ஒற்றுமை மாநாடு – வீடியோ!

ஈரோடு (16 ஜன 2023): ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். பிளாட்டினம் மஹாலில் நேற்று தொடங்கிய இந்த மாநாடு இன்று இரவு நிறைவுறும். இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும்...

கொரோனா பரிசோதனை – மர்ம மாத்திரை: மேலும் ஒருவர் உயிரிழப்பு!

ஈரோடு (27 ஜூன் 2021): ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொரோனா மாத்திரை என கூறி மர்மநபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட சம்பவத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பெருமாள்மலை சேனாங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பண கவுண்டர். இவரது மனைவி மல்லிகா(55). மகள் தீபா(30). இவர்களது தோட்டத்தில் பணிபுரிந்தவர் குப்பம்மாள் (60). இந்த நிலையில், நேறறு காலை கருப்பண கவுண்டரின் வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், கொரோனா…

மேலும்...

தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடந்த மற்றும் ஒரு நிகழ்ச்சி!

ஈரோடு (06 மார்ச் 2020): ஈரோடு அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மற்றும் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மசூதி முன்பு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அதன் அருகே மசூதியும் உள்ளது. அந்த கோயிலில் மார்ச் 1ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று…

மேலும்...

அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை – பட்டப்பகலில் பயங்கரம்!

ஈரோடு (03 பிப் 2020): ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, அண்மையில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக பிரமுகர், சின்ன தங்கம் என்ற ராதாகிருஷ்ணன், செல்லம்பாளையத்தில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில், தனது இருசக்கர வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக கொடுத்துவிட்டு இன்று காலையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது கறுப்பு நிற ஸ்கார்பியோ காரில் அங்கு வந்த கூலிப்படையினர் 4 பேர், திடீரென…

மேலும்...

சிஏஏ விவகாரம்: முஸ்லிம் பெண்ணின் வங்கி கணக்கு புத்தகத்தில் தில்லு முல்லு செய்த வங்கி!

ஈரோடு (30 ஜன 2020): ஈரோட்டில் முஸ்லிம் பெண்ணின் வங்கிக் கணக்கு புத்தகத்தில் புலம் பெயர்ந்தவர் என பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. ஈரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் டாக்டர் சலீம் மனைவி ஜஹானாரா பேகம் என்பவர் வங்கிக் கணக்குத் துவக்கினார். வங்கி மூலம் கணக்கு துவங்கி கணக்குப் புத்தகம் வழங்கினர். அதில் இரு இடங்களில் புலம் பெயர்ந்தவர்(migration)என பதிவாகி உள்ளது. இதை அறிந்து டாக்டர் சலீம்…

மேலும்...