டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு!

புதுடெல்லி (29 ஜன 2021):டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் கூறும் போது, “குண்டுவெடிப்பு தொடர்பாக மாலை 5:45 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது, நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை” என கூறினார். குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும்...