திமுக அரசின் முடிவுக்கு பாஜக வரவேற்பு!

சென்னை (14 ஜூன் 2021): பெண்களை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க திமுக அரசு எடுத்த முடிவை தமிழக பாஜக வரவேற்றுள்ளது. முன்னதாக இந்து மதத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் முடிவை தமிழக பாஜக தலைமை வரவேற்றது. இந்நிலையில் பெண்களை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...