அதிமுக பாமக இடையே புகைச்சல்!

சென்னை (06 ஜன 2020): பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பாமக இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது. கடந்த 31-ந்தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் கூடியது. டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தொடங்கி கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அரசியலில் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல கோரிக்கைகளை தீர்மானங்களாக…

மேலும்...

ஆளுங்கட்சியின் அராஜகத்தையும் மீறிய வெற்றி – ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை (03 ஜன 2020): ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் அராஜகத்தையும் மீறி வெற்றி பெற்றுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியின் அராஜகம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை ஆகிய எதிர்மறைக் கூறுகளை மீறி தி.மு.க.கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உள்ளபடியே இது நமக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆகும். எத்தகைய அராஜகத்தையும், அடாவடிகளையும் மீறி வெற்றி பெறும் வல்லமை…

மேலும்...

அதிமுக தலைமை குறித்து அன்வர் ராஜா ஓப்பன் டாக்!

சென்னை (04 ஜன 2020): அதிமுகவுக்கு ஒரு முஸ்லிம் கூட ஓட்டு போட மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனது மகனையும், மகளையும் நிறுத்தி படுதோல்வி அடைந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தே நான் என் பிள்ளைகள் இருவரையும் நிறுத்தினேன். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் எங்கள் ஊரில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு ஆதரளித்ததால் அதிமுகவுக்கு எப்படி மக்கள் ஓட்டு போடுவார்கள்?, அது எனக்கு…

மேலும்...

திமுகவில் இணையும் அன்வர்ராஜா – அதிர்ச்சியில் எடப்பாடி!

ராமநாதபுரம் (04 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்பியும் சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர்ராஜா திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பாஜகவுடன் இணைந்துகொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களுக்கும் துணை போகிறது. இது அதிமுகவில் உள்ள முஸ்லிம்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களித்ததற்கு அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கும் குடியுரிமை சட்ட ஆதரவே காரணம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இனியும்…

மேலும்...