அசாதுதீன் ஒவைசிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!

புதுடெல்லி (16 மார்ச் 2022): அசாதுதீன் ஒவைசிக்கு “ஆண்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்” விருது லோக்மத் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. லோக்மத் நாடாளுமன்ற விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் எட்டு வெவ்வேறு பிரிவுகளில் (லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து தலா நான்கு) சிறந்த பங்களிப்புக்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜூரி குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பங்களிப்பை ஆய்வு செய்து விருதுக்கு தேர்வு செய்தது. கோவிட்-19 தொற்றுநோய்…

மேலும்...

கடுமையாக உழைத்தோம் – அசாதுத்தீன் ஒவைசி!

புதுடெல்லி (11 மார்ச் 2022): உத்தரப்பிரதேசத் தேர்தலில் கடுமையாக உழைத்தும் மக்கள் மாற்றி தீர்ப்பளித்துவிட்டனர் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக நினைத்துப் பார்க்காத வெற்றியை பெற்றது. காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்…

மேலும்...

ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார் – அசாதுதீன் ஒவைசி!

லக்னோ (13 பிப் 2022): ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஒவைசி, ஹிஜாப் அணிந்த பெண்கள் மருத்துவர்களாகவும், மாவட்ட நீதிபதிகளாகவும், துணை மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளாகவும் (SDM) ஒரு நாள் இந்தியாவின் பிரதமராகவும் மாறுவார்கள் என்று கூறினார். ஹிஜாப் விவகாரம் குறித்து பேசிய அவர், “ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காகப் போராடும்…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – பாகிஸ்தானுக்கு அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை!

ஐதராபாத் (10 பிப் 2022): இந்தியாவில் ஹிஜாப் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் தலையிட வேண்டாம் என ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை…

மேலும்...