வெளிநாட்டு ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கு இலகுவான முறையில் சவூதி அரேபியா புதிய நடைமுறை அமல்!

ஜித்தா (14 நவ 2021): வெளிநாட்டிலிருந்து வரும் ஹஜ் உம்ரா யாத்ரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவிற்கு தாங்களாகவே செல்லும் வசதியை சவூதி அரேபியா ஏற்படுத்தியுள்ளது.

ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே ஹஜ் உம்ரா யாத்ரீர்கர்கள் மக்காவிற்கும், மதீனாவிற்கும் செல்லும் வசதி இருந்து வந்தது. இது தற்போது தளர்த்தப்பட்டு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இரண்டு விண்ணப்பங்கள் மூலம் இதை எளிதாக்கியுள்ளது.

ஹஜ் உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவிற்கு சென்றதும், தவக்கல்னா மற்றும் எதமர்னா ஆப் மூலம் இரண்டு பெரிய மசூதிகளுக்கு செல்ல அனுமதி பெறலாம். . இனி இடைத்தரகர்களின் தேவை இருக்காது. இந்தத் திட்டம், தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான சவுதி ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறது.

சவுதி அரேபியாவால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

முன்னதாக யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவை அடைவதற்கு முன், குதும் தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மஸ்ஜிதுல் ஹராமில் தொழுகையில் கலந்து கொள்வதற்கும் மஸ்ஜிதுல் நபவியில் ரௌதா நபியை தரிசிப்பதற்கும் அனுமதி பெற முடியும்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply