பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த சவூதி அரசு நடவடிக்கை!

Share this News:

ரியாத் (11 ஜூலை 2021): ‘சவூதி அரேபியாவில் பெட்ரோல் விலை உய ராது; ஜூன் மாத விலையே தொடரும்’ என்று அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.

சவுதி உள்நாட்டு சந்தைகளில் அதிகரித்து வரும் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த மன்னர் சல்மானின் சிறப்பு உத்தரவின்படி, வரும் மாதங்களில் கடந்த ஜூன் மாத விலையிலேயே பெட்ரோல் மக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் கிடைக்கும்.

இதனால் ஏற்படும் நிதி இழப்பை சவூதி அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சவூதி மன்னரின் புதிய அறிவிப்பின்படி, ஜூலை மாதத்தில் விலையில் அதிகரிப்பு இருக்காது. ஜூன் விலைகள் அப்படியே தொடரும். 91 வகை பெட்ரோல் பொருட்களின் விலை 2.18 ரியால் மற்றும் 95 வகை பெட்ரோல் பொருட்களின் விலை 2.33 ரியால் என்கிற நிலையில் இருக்கும்.

சவூதி மன்னர் சல்மானின் உத்தரவின்படி, எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை அரசாங்கம் ஏற்கும்.

முந்தைய மாதங்களின் சராசரி அதிகரிப்புப்படி, ஜூலை மாதத்தில், 91 வகை  பெட்ரோல் பொருட்களின் விலை 2.28 ரியால்களாகவும், 95 வகை பொருட்களின் விலை 2.44 ரியால்களாகவும் திருத்தப்பட்டது.

அரசின் புதிய அறிவிப்பால் இந்த விலை அதிகரிப்பு தவிர்க்கப் பட்டுள்ளது.

இனிமேல், ஜூன் மாதத்தை விட ஒவ்வொரு மாதமும் விலை உயர்ந்தால், கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்கும் என்றும் அதில் கூறப் பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply