இந்தியர்கள் இணையம் (ஆன்லைன்) மூலம் உம்ரா விசா பெற வாய்ப்பு!

Share this News:

இணையம் (ஆன்லைன்) மூலம் உம்ரா விசா பெற இந்தியர்களுக்கு அனுமதி!

ரியாத் (11 ஜன 2022): சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இணையம் மூலம் (ஆன்லைனில்) உம்ரா விசா பெறுவதற்கான நடைமுறைகளை விளக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் உம்ரா விசா பெறலாம்.

சவூதி அரேபியாவால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முழுமையாக பெற்ற 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உம்ரா விசா வழங்கப்படுகிறது. தற்போது சவூதி அரேபியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு மின்னணு உம்ரா விசா வழங்கப்படும் என ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் கீழ் உள்ள மின்னணு உம்ரா போர்டல் மூலம் விசா நடைமுறைகளை செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலம் யாத்ரீகர்கள் உம்ராவுக்கு வர வேண்டும். மின்னணு உம்ரா போர்ட்டலில் உள்நுழைவதன் மூலம், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உம்ரா ஏஜென்சிகள் பற்றிய விரிவான தகவல்களைப் பார்க்கலாம். உம்ரா விசா விண்ணப்பதாரர்களுக்கான முதல் படி, அத்தகைய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதாகும்.

பின்னர் யாத்ரீகர்கள் விரும்பும் பேக்கேஜ்களைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தலாம். தங்குமிடம் மற்றும் போக்குவரத்து உட்பட அடிப்படை சேவைகளுக்கும் பணம் செலுத்த வேண்டும்.

சவூதியிலிருந்து திரும்பும் பயண டிக்கெட்டுகள், மருத்துவக் காப்பீடு, சவூதி அரேபியாவில் தடுப்பூசி போடுதல், உம்ரா செய்வதற்கும் மஸ்ஜிதுல் நபவிக்குச் செல்வது குறித்து அனைத்தும் புறப்படுவதற்கு முன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உம்ரா விசாவிற்கு https://eservices.haj.gov.sa/ என்ற போர்டல் மூலம் விண்ணப்பிக்கலாம்.


Share this News:

Leave a Reply