சவூதி அரேபியாவின் புதிய உத்தரவு இந்தியர்களுக்கும் பொருந்தும்!

ரியாத் (30 நவ 2021): சவூதி அரேபியாவில் இருந்து விடுமுறையில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற வெளிநாட்டினரின் விசா மற்றும் குடியுரிமை அட்டை (இக்காமா) காலாவதி காலம் வரும் ஜனவரி 31, 2022 வரை இலவசமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் விசாக்கள் ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்கப்படும். சவூதிக்கு வர முடியாமல் நாட்டில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இந்த முடிவு பயனுள்ளதாக இருக்கும். சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இருப்பினும், சவூதி அரேபியாவில் இருந்து இரண்டு தவணை தடுப்பூசியைப் பெற்று ஊர் சென்றவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

விசா புதுப்பித்தலுக்கு குடிவரவுதுறை (ஜவாஸாத்) அலுவலகம் அல்லது வேறு எதையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை.

இதற்கிடையே இந்தியாவிலிருந்து டிசம்பர் 1, 2021 முதல் நேரடியாக சவூதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியர்களுக்கு புதிய பலன் கிடைக்குமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் இது இந்தியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தவிர, பிரேசில், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, லெபனான், எகிப்து, எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா, மொசாம்பிக், போட்ஸ்வானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரும் சவூதி குடியுரிமை அட்டை (இக்காமா) இலவச நீட்டிப்பு மற்றும் மறு நுழைவுக் காலத்தின் (Re-entry Visa) பலனை பெறுவார்கள்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply