சவுதியில் தன்னார்வத்தோடு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் இந்தியர்கள்!

Share this News:

ரியாத் (07 ஜன 2021): சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்ட கோவிட் 19 தடுப்பூசி விநியோகத்தின் முதல் கட்டத்தில் பல இந்தியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த மதம் முதல் சவுதியில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

மேலும் தடுப்பூசியை தன்னார்வத்தோடு பெற்றுக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்முலம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்படி பலர் தடுப்பூசிக்கு விண்ணப்பித்து அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.


Share this News:

Leave a Reply