உலகின் முதல் காகிதமற்றதாக மாறும் துபாய் அலுவலகங்கள்!

துபாய் (12 டிச 2021): துபாயில் அரசுத் துறை முற்றிலும் காகிதமற்றது என்று துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்தார்.

துபாயை டிஜிட்டல் நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக ஷேக் ஹம்தான் 2018 இல் காகிதமில்லா திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டம் ஐந்து கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. ஐந்தாவது கட்டத்தின் முடிவில், துபாயில் உள்ள 45 அரசுத் துறைகளும் காகிதமற்றவை. இதன் மூலம், இந்த துறைகள் 1800 டிஜிட்டல் சேவைகளை செயல்படுத்தின. இது 336 மில்லியன் ஆவணங்களைச் சேமித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் மூலம், உலகின் முதல் காகிதம் இல்லாத அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply