குவைத்தில் பல்வேறு நாடுகளுக்கு மீண்டும் விமான தடை!

குவைத் (28 நவ 2021): குவைத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து நுழைய தடை விதிக்கும் வகையில் முன்பு நடைமுறையில் இருந்த சிவப்பு பட்டியல் முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் புதிய வேரியன்ட் (ஒமிக்ரான்) பற்றிய அறிக்கைகளைத் தொடர்ந்து ஒன்பது ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், லெசோதோ, ஸ்வதானி, ஜாம்பியா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுக்கு விமானப் போக்குவரத்துத் துறை தடை விதித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் வேறு நாட்டில் தனிமைப்படுத்தப்படாமல் 14 நாட்களுக்கு குவைத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

புதிய வைரஸ் பரவுவதால், மேலும் பல நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படலாம், இந்தியா உட்பட 43 நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்தியாவில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply