சிறுநீரகம் பற்றி அறிவோம் -பகுதி 2

உயிர் – ஒரு வேதி செயல். பல இரசாயன இயக்கங்களின் வெளிப்பாடு. உயிர் வாழ உணவு. உணவின்றி உயிர்வேதியல் இயக்கம் இல்லை. உடல் வெப்பம் உயிர் இயக்கத்தின் வெளிப்பாடு.

வேதிச்செயல்கள் கழிவுகளை உருவாக்குகின்றன,24 மணி நேரமும் ,மூச்சு நிக்கும் வரையிலும். 1300 க்கும் மேற்பட்ட கழிவுகள் உருவாகின்றன, தினமும். இவை இரத்த கழிவுகளாகவும், உறுப்புகளின் ஊடே விரவியும் இருக்கின்றன.

இக்கழிவுகளை வெளியேற்ற இயற்கை செய்த உபாயம் சிறுநீரகங்கள். திடக்கழிவுகளை மலக்குடல் மூலமும், திரவ கழிவுகளை சிறுநீரகங்கள் மூலமும் உடல் வெளியேற்றுகிறது.

இரத்த சுழற்சியில் உறுப்புகள் உருவாக்கும் கழிவுகள் கலந்து சிறு நீரகங்களை சென்றடைகின்றன.

ஒவ்வொரு சிறுநீரகமும், ஒரு அற்புத உலகம். 1 மில்லியன் வடிகட்டிகளை கொண்டது. இவை nephron கள் எனப்படும்.

வெறும் கழிவுகளை மட்டும் அகற்றுவதில்லை இவை, Hemoglobin என்ற பிராண வாயுவை சுமந்து செல்லும் இரத்த புரதம் உருவாக்க, VitD என்ற ஹார்மோனை உசுப்ப, எலும்புகளை பலமாக்க, Parathormone என்ற ஹார்மோனை கட்டுபடுத்த, இரத்த அழுத்தத்தை பண்படுத்த, நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க, நீர் மற்றும் முக்கிய அமிலங்களை, electrolyte களை கட்டுப்படுத்த பல பிரமிப்பூட்டும் வித்தைகளை புரிகின்றன.

சிறுநீர் உருவாக்கம் மட்டுமே இதன் பணி அல்ல.

இந்த வடிகட்டிகள் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டால்? இதை தான் சிறுநீரக சிதைவு, செயலிழப்பு, failure, என்று அழைக்கிறோம்.

முதலில் கழிவு நீக்கம் முடங்கும், பின்னர் மேற்கூறிய ஒவ்வொரு செயலும் பாதிக்கப்படும். ஒரே நாளில் நடக்கலாம், வார,மாத, வருட கணக்கிலும் நடக்கலாம்.

கால்வீக்கம், மூச்சிரைப்பு, உடல் இளைப்பு, பசியின்மை, குமட்டல், வாந்தி,அடிக்கடி இரவிலும் சிறுநீரு கழித்தல்
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்.

பரிசோதித்து அறிவீர்! ஆனால் முற்றிலும் செயலிழந்த பின்னரே, 60 சதவிகித nephron கள் இறந்த பின்னரே இத்தகைய அறிகுறிகள் தெரியும். அதனாலேயே, மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய மருத்துவம் முயல்கிறது. அதற்கு தான் உடலில் நேரும் நுண்ணிய மாறுதல்களை பரிசோதனைகள் மூலம் ஆய்கின்றது. இது 1960 களுக்கு பின்னரே சாத்தியப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு முந்தய காலத்தில் கண்டறிவதும் கடினம், ஆறுதல்களை மட்டுமே கூறமுடியும்.

Dr. Venkatesh Natarajan. Nephrologist

பகுதி 1 ஐ வாசிக்க

இச்செய்தியைப் பகிருங்கள்: