தொடரும் சோகம் – மூன்று வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

ஐதராபாத் (28 மே 2020): தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்திய கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க அரசோ, மாவட்ட நிர்வாகங்களோ எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் மடாக் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் புதன்கிழமை இரவு 3 வயது குழந்தை சாய் வரதன் 120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை.

சாய் வரதனை உயிருடன் மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் அனைத்தும் தோல்வியில் முடிந்து, வியாழன் காலை குழந்தையின் உடலை மட்டுமே மீட்க முடிந்தது.

இச்செய்தியைப் பகிருங்கள்: