நிதிஷ்குமார் பாஜகவில் இணையப் போகிறாரா? – ஆர்.ஜே.டி தலைவர் கேள்வி!

Share this News:

புதுடெல்லி (27 டிச 2020): நிதிஷ்குமார் தனது கட்சியை பஜாகவுன் இணைக்க திட்டம் எதுவும் வகுத்துள்ளாரா? என்று ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

அருணச்சல பிரதேசத்தில் ஆறு ஜேடியு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததன் மூலம் நிதிஷ்குமார் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். ஒரு எம்.எல்.ஏ மட்டுமே அவரிடம் அங்கு உள்ளது.
இந்நிலையில் பீகார் ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா நிதிஷ்குமாரை கடுமையாக சாடியுள்ளார். @ஏழு எம்.எல்.ஏக்களில் 6 பேர் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது ஆச்சரியமளிக்கிறது. அவ்வாறு செய்யுமாறு நிதீஷ்குமாரால் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதா? அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைப்பாரா?” என்று ஜா காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் நிதீஷ் குமார் வெறும் 43 எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வரானார். தற்போது அவரது ஆட்சி ஆபத்தான நிலையில் உள்ளதை காட்டுகிறது. அருணாச்சல பிரதேசத்தை அடுத்து பீகாரிலும் அது நடக்கும் என்று மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply