தாலிபானை ஆதரிக்கும் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய வலியுறுத்தல்!

Share this News:

புதுடெல்லி (23 ஆக 2021): தாலிபானை ஆதரித்ததற்காக அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்து ரிபப்ளிக் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திகளில் ஒன்றில் “ரிபப்ளிக் வித் தலிபான்” என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டது. “ரிபப்ளிக் வித் தலிபான்” என்ற ஹேஷ்டேக் சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் ரிபப்ளிக் டிவி மற்றும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக சமூக வலைதளங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் தலிபான்களுக்கு ஆதரவளித்ததாகக் கூறி பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாலிபானை ஆதரித்த ரிபப்ளிக் டிவி தலிபான்களுடன் இருப்பதாக ட்வீட் செய்தும் ஏன் கைது செய்யப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Share this News:

Leave a Reply