கொரோனா பாதிப்பு இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் அதிகரிப்பு – இறப்பு எண்ணிக்கையும் உயர்வு!

புதுடெல்லி (31 மே 2020): இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. கொரோன வைரஸ் காரணமாக க இறந்தவர்களின் எண்ணிக்கை 5164 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 8380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நாளில் உறுதிப்படுத்தப்பட்ட அதிக எண்ணிக்கையாகும்.

இதன் மூலம் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 182142 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 89995 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 86984 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிராவில், மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 65168 ஆகவும், 2197 மரணங்களும் பதிவாகியுள்ளன.

டெல்லியில் புதிதாக பதிவாகியுள்ள கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் தலைநகரில் மொத்தமாக எண்ணிக்கை 19,844 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் இந்த நோயால் இறந்தனர். இதன் மூலம் டெல்லியில் மொத்த இறப்பு எண்ணிக்கை 473 ஆக உயர்ந்தது.

குஜராத்தில், கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 16343 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1007 ஆகவும் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 262, ஒடிசாவில் 129, ராஜஸ்தானில் 76, அசாமில் 56 மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூரில் தலா நான்கு பேர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்: