பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் விடுதலை – வீடியோ!

புதுடெல்லி (21 ஜூலை 2022): ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைர் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டர்.

மத உணர்வை புண்படுத்தியதாக ஜுபைரின் பழைய ட்வீட்டர் பதிவை வைத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதான நிலையில், அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்ஐஆர்களிலும் உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, புதன்கிழமை இரவு திகாரில் இருந்து ஜுபைர் விடுவிக்கப்பட்டார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உ.பி.யில் அவருக்கு எதிராக பல எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டன – ஹத்ராஸில் இரண்டு மற்றும் சீதாபூர், லக்கிம்பூர் கெரி, முசாபர்நகர், காஜியாபாத் மற்றும் சந்தௌலி காவல் நிலையத்தில் தலா ஒன்று – இதே போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் ஜுபைருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டன. இவை அனைத்திலிருந்தும் ஜுபைருக்கு ஜாமீன் வழங்கபட்டது.

முகமது ஜுபைர் திகாரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதை மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். மேலும்
உ.பி.யில் உள்ள அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா முஹம்மது நபிக்கு எதிராக தெரிவித்த கருத்து உலக அளவில் கவனம் ஈர்க்க காரனமாக இருந்தவர் முஹம்மது ஜுபைர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல நுபுர் சர்மாவின் கருத்தால் உலக அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply