ராகுல் காந்தி டி-சர்ட் விவகாரம் – பாஜகவுக்கு மஹுவா மொய்த்ரா எச்சரிக்கை!

Share this News:

புதுடெல்லி (10 செப் 2022): ராகுல் காந்தி மீது பாஜகவின் ‘டி-சர்ட்’ கேலிக்குப்பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, பாஜக எல்லை மீறுவதாக தெரிவித்துள்ளார்.

நடந்து வரும் “பாரத் ஜோடோ யாத்ரா” பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த டி-சர்ட்டின் விலை 41,000 ரூபாய்க்கு மேல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது.

இந்நிலையில் பாஜகவின் கீழ்த்தரமான விமர்சனங்களை எதிர் கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மஹுவா மொய்த்ரா “எதிர்க்கட்சிகளின் தனிப்பட்ட உடைகள் மற்றும் உடைமைகள் குறித்து எல்லை மீறி கருத்து தெரிவிக்க வேண்டாம், ,மீறும் பட்சத்தில் பாஜக எம்.பி.க்கள் அணியும் கடிகாரங்கள், பேனாக்கள், காலணிகள், மோதிரங்கள் மற்றும் உடைகள் போன்றவற்றிலும் வெளிச்சம் போட்டு கட்ட நேரிடும். இந்த விளையாட்டை நீங்கள் தொடங்கிய நாளிலேயே நீங்கள் அழிய நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என்று அவர் சனிக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.


Share this News:

Leave a Reply