காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல்!

ஜம்மு (25 டிச 2021): ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

சோபியான் வட்டாரத்தில் உள்ள சௌகாம் பகுதியில் அதிகாலையில் இந்த மோதல் தொடங்கியது. அந்த இடத்தில் மோதல் நீடித்து வருவதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. இத்தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரியும் உள்ளூர்வாசி ஒருவரும் கொல்லப்பட்டனர்.

அர்வானி பகுதியில் உள்ள முமன்லால் பகுதியில் நடந்த மோதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவரிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply