எம்.எல்.சி தேர்தலில் டாக்டர் கஃபீல்கான் போட்டி!

லக்னோ (16 மார்ச் 2022): வரவிருக்கும் உத்தரப்பிரதேச எம்எல்சி தேர்தலில் தியோரியா-குஷிநகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி டாக்டர் கஃபீல்கானை வேட்பாளராக நிறுத்துகிறது.

இதனை சமாஜவாதி கட்சியின் தேசியச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ராஜேந்திர சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த கஃபீல் கான், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை ட்வீட் செய்து இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏராளமான குழந்தைகள் இறந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகி பின்பு குற்றமற்றவர் என விடுதலையானார்.

மேலும் கடந்த ஆண்டு நவம்பரில், உத்தரப்பிரதேச அரசு கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக் கல்லூரியில் குழந்தை நல மருத்துவர் டாக்டர் கஃபீல்கானை வேலையை விட்டு நிறுத்தியது. அதுமட்டுமல்லாமல், CAA எதிர்ப்பு கூட்டத்தில் பேசியதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply