பயமிருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம் – காங்கிரஸ் தொண்டர்களிடம் ராகுல் காந்தி ஆவேசம்!

Share this News:

புதுடெல்லி (17 ஜூலை 2021): காங்கிரஸ் கட்சியில் இருக்க பயமாக இருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் ராகுல் காந்தி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசம், குஜராத் போன்ற பெரிய மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில்
கட்சி தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார் ராகுல் காந்தி. அப்போது வழக்கத்தை விட ஆவேசம் அதிகமாகத் தென்பட்டது.

மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பிறகு பாஜகவில் இணைந்து கொண்டார். அவர் பாஜகவுக்கு பயந்தே அந்த கட்சியில் இணைந்தார்.அதேபோல யாருக்கும் காங்கிரசில் இருக்க பயமாக இருந்தால் ஆர்எஸ்எஸ் பக்கம் செல்லலாம். பயப்படாத நிறைய பேர் காங்கிரஸ் கட்சிக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். நமது கட்சிக்குள் இருந்து கொண்டு பயப்பட்டு கொண்டே இருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள். என்று ராகுல் காந்தி பேசினார்.

சமீபத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சு கடுமையாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply