டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து உபி பீகாரிலும் தொடங்கிய தொடர் போராட்டம்!

புதுடெல்லி (15 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை தொடர்ந்து அதே வழியில் உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பொது மக்கள் அமைதி வழி தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த தொடர் போராட்டத்தில் ‘சர்வ தர்ம சமா பவா’ (அனைத்து மதத்தினருக்கும் ஒரே கொள்கை) என்ற பல மதங்களின் பிரார்த்தனைக் கூட்டம் என நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்ட வழிமுறை பலராலும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளன.

இதே வழிமுறையை பின்பற்றி உத்திர பிரதேசம் மாநிலம் பிரக்யாராஜ் பகுதி மன்சூர் அலிகான் பூங்காவில் பொது மக்கள் தொடர் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

அதேபோல பீகார் கயா, மற்றும் மேற்கு வங்கம் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் அமைதி வழி தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply