லவ் ஜிஹாத் குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!

லக்னோ (21 ஏப் 2022): உத்திர பிரதசத்தில் லவ் ஜிஹாத் குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உத்திர பிரதேசம் மொராதாபாத்திலிருந்து தப்பிச் சென்ற முஸ்லீம் இளைஞரும், இந்து பெண்ணும் தங்களது திருமணத்தை மொராதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்ய முயன்றபோது இந்து யுவ வாஹினி அமைப்பினர், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக இருவரையும் இந்து யுவ வாஹினி அமைப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முஸ்லீம் இளைஞர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 363 (கடத்தல் தண்டனை), 366 ( பெண்ணைக் கடத்துதல், கடத்தல் அல்லது திருமணத்தை கட்டாயப்படுத்தத் தூண்டுதல் போன்றவை) மற்றும் மதமாற்றத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய லூதியானா காணாமல் போனோர் வழக்கின் புலனாய்வு அதிகாரி (ஐஓ) குருஜீத் சிங், “இளைஞருடன் தப்பிச்சென்ற பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்த நபர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும் விசாரித்து வருகிறோம்” என்றார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply