கொரோனா வைரஸ் – பேரிடராக கருதி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு!

புதுடெல்லி (14 மார்ச் 2020): கொரோனாவை பேரிடராகக் கருதி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பை ஒவ்வொரு மாநிலமும் பேரிடராகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில பேரிடர் நிதியில் (எஸ்.டி.ஆர்.எஃப்) இருந்து கொரோனா பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுகளை மாநில அரசுகள் நிர்ணயிக்கும். தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் மாநிலப் பேரிடர் நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.” என்று மத்திய அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply