கொரோனா தடுப்பூசியால் மரணம் – மத்திய அரசு மற்றும் பிலகேட்ஸுக்கு நீதிமன்றம் நோட்டிஸ்!

மும்பை (03 செப் 2022): கொரோனா தடுப்பூசியால் பெண் மருத்துவர் உயிரிழந்ததாகவும் இழப்பீடு கோரி , உயிரிழந்த பெண்ணின் தந்தை அளித்த மனு குறித்து பதிலளிக்க ஒன்றிய அரசு, மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர், டிசிஜிஐ தலைவர் மற்றும் பலருக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பையை சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் அளித்த தனது மனுவில், “கோவிட்-19 தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து உண்மை தன்மை அறியாமல் தடுப்பூசியை எடுக்க முன்கள பணியாளர்களை கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கோவிஷீல்ட் தடுப்பூசியை உட்கொண்டதன் மூலம் தனது மகள் டாக்டர் சினேகல் லுனாவத் உயிரிழந்ததாகக் கூறியுள்ள அவர், மகள் இதற்காக 1000 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், “ஜனவரி 4, 2021 அன்று, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் டாக்டர் வி.ஜி. சோமானி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை என்று திட்டவட்டமாக கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர் இது தவறான தகவல் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேபோன்ற நேர்காணல்களை டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா மற்றும் பலர் அளித்தனர். தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்று கூறி அனைவரும் தடுப்பூசிகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைப் பற்றி தவறான செய்திகள் மற்றும் தவறான விளக்கங்களை உருவாக்கியதாக அதிகாரிகள் மீது திலீப் லுனாவத் மனுவில் குற்றம் சாட்டியுள்ள மனுதாரர். மகளின் மரணத்திற்கு இழப்பீடு கோரியுள்ளார்.

“டாக்டர் வி.ஜி. சோமானி போன்ற மூத்த அதிகாரிகளின் தவறான விவரிப்புகள் மற்றும் தவறான விளக்கங்கள் மற்றும் மாநில அதிகாரிகளால் சரியான சரிபார்ப்பு இல்லாமல் செயல்படுத்தப்பட்டதன் அடிப்படையில், எனது மகள் போன்ற சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், “டாக்டர் ஸ்னேஹல் லுனாவத் தனது முதல் டோஸ் தடுப்பூசியை ஜனவரி 28, 2021 அன்று எடுத்தார்.பின்னர் மார்ச் 1, 2021 அன்று, கோவிட் -19 தடுப்பூசியின் பக்க விளைவுகளால் சினேகா உயிரிழந்தார். என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

“மத்திய அரசின் AEFI குழு 2021 அக்டோபர் 2 அன்று, புகார்தாரரின் மகள் மரணம் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளால் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டதையும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் சினேகா லுனாவத் நாசிக்கில் உள்ள இகத்புரிக்கு அருகில் உள்ள தமங்கானில் உள்ள SMBT பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவராகவும் மூத்த விரிவுரையாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply