கொரோனா வைரஸ் தொற்றில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி (25 மே 2020): உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது.

கொரோனா பரவல் உலகை பெருமளவில் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட, கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்தியா நேற்றுவரை 11-வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்தியா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 40 ஆயிரத்தை கடந்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்: