இந்தியாவில் 24 மணிநேரத்தில் 2.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (16 ஜன 2022): நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 2.71 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,71,202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 71 லட்சத்து 22 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு நேற்று 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 66 ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 331 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது சிகிச்சை எடுத்துவருவோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 50 ஆயிரத்து 377-ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 16.66 சதவீதத்தில் இருந்து 16.28 சதவீதமாக குறைந்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply