பாரத் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

புதுடெல்லி (15 செப் 2022): பாரத் ஜோடோ யாத்திரையை அடுத்து இன்னொரு யாத்திரையை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் புதிய யாத்திரை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கில் குஜராத்தில் இருந்து கிழக்கே அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்யும் புதிய யாத்திரையை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவிக்கையில், பாரத் ஜோடோ யாத்திரை வெற்றியடைந்ததுள்ளதால் காங்கிரஸ் உற்சாகத்தில் உள்ளது. அடுத்த ஆண்டு மற்றொரு யாத்திரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருவதாகவும், 2023ல் குஜராத்தில் உள்ள போர்பந்தரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பரசுராம் குண்ட் வரை யாத்திரை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

பாரத் ஜோடோ யாத்திரை இந்திய அரசியலை மாற்றி காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்று ரமேஷ் நம்பிக்கை தெரிவித்தார். ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை 3,570 கிமீ தூரம் நடைபயணம் 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து 150 நாட்களில் இந்த யாத்திரை முடிக்கப்படும். என்று அவர் தெரிவித்தார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply