தேச பக்தர்கள் போர்வையில் தேச விரோதிகள் – அர்னாப் மீது விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!

Share this News:

புதுடெல்லி (20 ஜன 2021): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அர்னாப் மீதான டிஆர்பி மோசடி வழக்கின் விசாரணையின் போது பாலகோட் தாக்குதல் குறித்து அர்னாபுக்கு முன்கூட்டியே தெரிந்த விவகாரம் வெளி வந்தது. பாலகோட் தாக்குதல் குறித்து வெளியான அர்னாபின் வாட்ஸ் ஆப் உரையாடல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை அர்னாப் எப்படி அறிந்திருந்தார்? என்று மோடி அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர் காட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அர்னாபிற்கு யார் தகவல்களை கசிய விட்டார்கள்?, அது பிரதமரா? அல்லது உள்துறை அமைச்சரா? என்பதை நாடு அறிய வேண்டும் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். தங்களைத் தேசபக்தர்கள் என்று அழைப்பவர்கள் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கைத் தானாக முன்வந்து விசாரிக்குமாறு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் உச்ச நீதிமன்றத்தையும் தேசிய விசாரணை அமைப்பையும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Share this News:

Leave a Reply