மீண்டும் ஊரடங்கு – முதல்வர் உத்தரவு!

மும்பை (28 நவ 2021): ஒமிக்ரான் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிராவில் ஊரடங்கிற்கு நிகரான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது.

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் அதிவேகத்தில் பரவக்கூடியது என்பது பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், மண்டல ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கொரோனா ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஏற்கெனவே ஒமிக்ரான் கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள், மருத்துவமனை கண்காணிப்பாளர்கள், சுகாதார துறை அதிகாரிகளுடன் மும்பை மாநகராட்சி நேற்று ஆலோசனை நடத்தியுள்ளது.

ஒமிக்ரான் கொரோனா குறித்து மகாராஷ்டிரா அலர்ட் ஆகியுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply