ஆண்டுவிழா நாடகம் போட்ட பள்ளிக்கூடம் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது!

பெங்களூரு (29 ஜன 2020): பள்ளி ஆண்டு விழாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நகைச்சுவை நாடகம் போட்ட பள்ளி நிர்வாகம் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4 ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசின் சட்டத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கூறி இந்துத்வா அமைப்பை சேர்ந்த ஒருவர் பிதார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து நடகத்தின் வீடியோ ஆதாரங்களை வைத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்கும் பேரில், கடந்த 26 ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 504, 5050(2), 124(ஏ), 153(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் பள்ளி மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதும் புகைப்படங்களாக உலா வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply