அரசு அதிகாரியை செருப்பால் அடித்த பெண் பாஜக பிரமுகர் – வைரல் வீடியோ!

புதுடெல்லி (06 ஜூன் 2020): பாஜக பிரமுகரும் டிக்டாக் பிரபலமுமான சோனாலி போகத் என்ற பெண் அரசு அதிகாரியை செருப்பால் அடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரியானா மாநிலம் பால சமந்த் மண்டி என்ற இடத்தில் சோனாலி, விவசாயிகள் சிலருடன் பருப்பு வியாபாரத்துக்கு சென்றுள்ளார். அப்போது சுல்தான் சிங் என்ற மார்க்கெட் கமிட்டி அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சோனாலி, காலணியால் சுல்தானை தாக்கினார். கேலி செய்ததற்காக அடித்ததாக சோனாலியும், தேர்தல் நேரத்தில் உதவவில்லை என்பதற்காக சோனாலி தன்னை தாக்கியதாக சுல்தானும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே சோனாலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரியானா முதல்வரிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

சோனாலி போகத், ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதி எம்எல்ஏ-வுக்கு பாஜக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்: