கொரோனா பரவல் – ஈரானிலிருந்து 234 இந்தியர்கள் நாடு திரும்பினர்!

புதுடெல்லி (15 மார்ச் 2020): கொரோனா பாதித்த ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 234 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்ப அழைத்து வரப்பட்டனர்.

உலகளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை அடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

இது இப்படியிருக்க ஈரானில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 234 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்ப அழைத்து வரப்பட்டனர்.

இதனிடையே இந்நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி இன்று (15/03/2020) ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் இன்று மாலை 05.00 மணிக்கு காணொலியில் ஆலோசிக்க உள்ளனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply