மோசமான நிலையில் தமிழ் சினிமா – விஜய் பட இயக்குனர் ஆதங்கம்!

சென்னை (21 ஏப் 2022): அனுபவமில்லாத இயக்குநர்களால் தமிழ் சினிமா மோசமாக உள்ளதாக விஜய்க்கு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விழா ஒன்றில் பேசுகையில், மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஹிட் படம் பண்ண தான் ஆவலுடன் இருப்பதாக இயக்குநர் பேரரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறார். விஜய்க்காக 3 கதைகள் ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும், இன்றைய சூழலுக்கேற்ப அந்த படத்தின் கதைகள் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இப்போதெல்லாம் ஷார்ட் பிலிம் பண்ணிட்டும், ஒரு படம், ரெண்டு படம் பண்ணிட்டும் பெரிய நடிகர்கள் படங்களை இயக்குநர்கள் இயக்குவதால் தான் தமிழ் சினிமா இப்படியொரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார். அனுபவமில்லாத இயக்குநர்களால் தமிழ் சினிமா நாசமடைந்து வருவதாகவும் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களுக்கு முன்னணி நடிகர்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பீஸ்ட் படம் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் பேரரசு இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply