மேற்கு வங்கத்திற்கு செல்லும் நடிகர் ரஜினி!

சென்னை (13 ஜூலை 2021): நடிகர் ரஜினிகாந்த் நாளை மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

அங்கே அவர் நான்கு நாட்கள் தங்கி இருந்து அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் 4 நாட்கள் நடித்தால், ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் ஏற்கனவே அறிவித்து உள்ள நிலையில் இந்த பயணம் அமையவுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று சென்னை திரும்பி வந்ததும் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்தாலோசனை நடத்தினார்.

பின்பு வருங்காலத்தில் அரசியலில் ஈடுபட போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்ந்த பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நல பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும். என்று தெரிவித்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply