திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு ஆர்எஸ்எஸ் கொலை மிரட்டல்!

டொரோண்டோ (12 செப் 2022): பிரபல திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவரது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனது சமீபத்திய படமான ‘காளி’ படத்தின் போஸ்டர் தொடர்பாக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் இருந்து பல்வேறு மிரட்டல்களை எதிர்கொண்ட லீனா மணிமேகலை, தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக திங்கள்கிழமை அதிகாலை ட்விட்டரில் ஒரு கடிதத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

 

டிவிட்டரில் லீனா மணிமேகலை அந்த மிரட்டல் கடிதத்தை பதிவிட்டு டொரொன்டோ காவல்துறையையும் டேக் செய்துள்ளார்.

அந்த கடிதத்தில் “லீனா மணிமேகலையின் வெறுக்கத்தக்க அணுகுமுறை இந்துத்துவா சித்தாந்தத்தை இழிவுபடுத்தியுள்ளது. லீனா இந்தியாவில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட மாட்டார்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீனாவின் செயல்களால் லீனாவின் குடும்பம் ‘விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்றும் ஆர்எஸ்எஸ்-ன் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், லீனா மணிமேகலை தனது ‘காளி’ படத்தின் போஸ்டர், ஒரு பெண் காளி தேவி புகைபிடிப்பது போன்று இருந்தது. இந்த போஸ்டர் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து லீனா விமர்சனத்திற்கு உள்ளானர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply